உசிலம்பட்டி இளைஞர்களின் வித்தியாசமான டெங்கு விழிப்புஉணர்வு நிகழ்ச்சி!

தமிழகம் முழுவதும்  மக்களை அச்சுறுத்தி வருகிறது டெங்கு. அதிலும் மதுரை மாவட்டத்தில்  அதிகமான அளவில் மக்களை பாதித்துள்ளது. அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் மக்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.


டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை என்னதான் அரசு எடுத்தாலும், மக்களின் பங்களிப்பும் இருந்தால்தான் இந்நோய் தாக்காமல் தப்பிக்க முடியும். டெங்கு பற்றிய விழிப்புஉணர்வை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில்  உசிலம்பட்டி இளைஞர்கள் புதுமையான முறையில் செயல்பட்டுள்ளார்கள். 

டெங்கு


உசிலம்பட்டியில் சில நாட்களுக்கு முன் டெங்குவால் ஜெய்கனேஷ் என்ற இளைஞர் மரணமடைந்தார். அவரைபோல் டெங்குவால் பாதிப்புக்குள்ளாகி இறந்தவர்களின் நினைவாக உசிலம்பட்டி  இளைஞர்கள் தன்னார்வ அமைப்புகள் இணைந்து,  தெருக்களை சுத்தப்படுத்தி மரக்கன்றுகள் நட்டனர்.  கிராமப்பகுதிகளில் சாக்கடைகளை தூர்வாரியும்,  குப்பைகளை அகற்றியும் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருப்பது பற்றிய விழிப்புணர்வை ஏறப்படுத்தினர்.  டெங்கு போன்ற கொடிய நோய்களிலிருந்து காத்துக்கொள்ள பொதுமக்களிடம் பரப்புரை செய்தனர். 

இதுபோன்று  சமூக சிந்தனையுடன், இயற்கையை காக்கும் வகையில் டெங்கு விழிப்புணர்வு பரப்புரையை தொடர்ந்து செய்ய உள்ளனர். உசிலம்பட்டி போன்ற பின்தங்கிய வட்டாரத்தில் இதுபோன்ற  சுகாதார விழிப்புணர்வில்   இளைஞர்கள் தன்னார்வமாக கலந்து கொண்டது அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுத்தது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!