Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஜயகாந்த் மனைவியுடன் திருச்சியில் சாமி தரிசனம்

தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த் இன்று தனது மனைவியுடன் திருச்சியில் சாமி தரிசனம் செய்தார்.
 
விஜயகாந்த்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சூடாமணிபுரத்தில் உள்ள பி.எல்.பி. பேலஸ் மகாலில் நேற்று நடைப்பெற்ற தே.மு.தி.க. மாநில செயற்குழு மற்றும் பொதுக் குழு கூட்டத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பும் முன்னர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா,   ஆகியோர் திருச்சி சமயபுரத்தை அடுத்த மாகாளிக்குடியில் உள்ள உஜ்ஜையினி காளியம்மன் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.

காலை 10 மணிக்கு கோயிலுக்கு வந்த விஜயகாந்த், மூலவர், அம்பாள் சன்னதிகளை வணங்கியதுடன், ஸ்ரீ வேதாளம் சன்னதி, ஸ்ரீ மதுரை வீரன் சன்னதி உள்ளிட்ட சன்னதிகளை சுற்றி வந்து தரிசனம் செய்தார்கள். சுமார் 45 நிமிடம் கோயிலில் மிக பக்தியோடு தரிசனம் செய்த விஜயகாந்த் மற்றும் பிரேமலதா ஆகியோர் கோயிலைச் சுற்றி அடிப்பிரகாரம் செய்தார்கள்.

உஜ்ஜயினியை  அரசாண்ட விக்ரமாதித்தன் என்ற பேரரசர் பூஜித்த தெய்வம் இந்த காளியம்மன். பௌர்ணமி, அஷ்டமி, அமாவாசை  ஆகிய தினங்களில் இங்குள்ள சக்தி தீர்த்தத்தில் குளித்து ஓம்காளியை வழிப்பட்டால், தீராத  நோய்கள் தீரும் என்பது ஐதீகம்.  செவ்வாய், வெள்ளி  ஆகிய தினங்களில் உஜ்ஜயினி ஓம்காளியை வழிப்பட்டு வந்தால் நினைத்தக் காரியங்கள்  கைக்கூடும் என்றும் கூறப்படுகிறது. 

விஜயகாந்த் வருகை உள்ளூர் போலீசாருக்குக் கூட அறிவிக்கப்படாமல் வந்து சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement