’புரட்சித்தலைவி அம்மா என சொல்லணும்’- செய்தியாளர்களிடம் சீறிய செல்லூர் ராஜு!

அமைச்சர் செல்லூர் ராஜு, 'புரட்சித்தலைவி அம்மான்னு சொல்லனும்'' என்று தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அறநிலையத்துறை சார்பில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மாட்டுதொழுவத்தில் சுயஉதவிக் குழுக்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பசுமாடு வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. இதில், அமைச்சர்கள்  செல்லூர் ராஜு, அமைச்சர் உதயகுமார், ஆட்சியர் வீரராகவராவ், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

 

புரட்சித்தலைவி

நிகழ்ச்சி முடிந்ததும் செய்தியாளர்களிடம் அமைச்சர் செல்ல்லூர்ராஜு பேசினார். அப்போது, ''முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் பற்றி எழுந்துள்ள பிரச்னைகளை மறைக்கத்தான் புதிய கவர்னர் நியமிக்கப்பட்டுள்ளாரா?'' என்று தனியார் தொலைக்காட்சி நிருபர் கேட்க, அதனால் கடுப்பான அமைச்சர் செல்லூர் ராஜு, "அம்மா பேரைச் சொல்லாதே. மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா என்று சொல்லு" என்று மிரட்டும் தொனியில் பேசினார். இது பத்திரிக்கையாளர்கள் மத்தியில் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ''தங்கள் கட்சித்தலைவரை  கட்சியினர்  எப்படி வேண்டுமானாலும் அழைக்கட்டும். அவர்களைப்போலவே மற்றவர்களும் அழைக்க வேண்டுமென்பது அராஜகமான செயல்''என்று செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!