தூய்மையான கோயிலாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தேர்வு!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை இந்தியாவில் சுத்தமான கோயிலாக மத்திய அரசு தேர்வு செய்து அறிவித்துள்ளது. இதனால் மதுரை மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு காரணமான மதுரை கலெக்டர் வீரராகவராவையும், மாநகராட்சி கமிஷனர் அனீஷ் சேகரையும்,  அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

தூய்மை பாரதம் திட்டத்தை மதுரை மாவட்டத்தில் தீவிரமாக செயல்படுத்திய  மாவட்ட நிர்வாகம், கடந்த சில நாள்களாக தூய்மையே சேவை திட்டத்தை  இடைவெளி இல்லாமல் செயல்படுத்தி வருகிறார்கள். வைகை ஆற்றை ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மாணவர்கள் பங்களிப்புடன் இரண்டு நாள்களாக  சுத்தம் செய்து டன் கணக்கில் குப்பைகளை அப்புறப்படுத்தினார்கள். அதுமட்டுமில்லாது பள்ளிகளில்  கலெக்டரே நேரடியாக  இறங்கி சுத்தம் செய்தார். அவருடைய சுறுசுறுப்பை பார்த்து மற்ற அதிகாரிகளும் , பொதுமக்களும் களத்தில் இறங்கினார்கள்.

மீனாட்சி

 மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஐநூறு மீட்டர் சுற்றளவில் பிளாஸ்டிக், பாலித்தீன் பயன்பாட்டுக்கு தடை போட்ட மாநகராட்சி நிர்வாகம் மீறி பயன்படுத்தினால் சம்பந்தப்படவர்களுக்கு அபராதம் வித்திக்க தொடங்கியது. அதுபோல் கோயிலுக்குள் குப்பைகளை போடுபவர்களை எச்சரித்து  வளாகம் முழுவதும் குப்பைக்கூடைகளை வைத்தனர். வரும்காலத்தில் குப்பை போடுபவர்களிடம் அபராதம் வசூலிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. கோயிலை சுற்றி யாரும் அசுத்தம் செய்துவிடாமல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டார்கள்.

மதுரை மீனாட்சி

 கலெக்டரும், மாநகராட்சி கமிஷனரும் மிக உறுதியாக செயல்பட்டதால் சுத்தமான கோயிலாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை மீனாட்சி அம்மன் கோயிலில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் செல்லூர்ராஜு, உதயகுமார், எம்.எல்.ஏக்கள்,  கலெக்டரையும், கமிஷனரையும் பாராட்டினார்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!