தமிழகத்தின் ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் அக்.6-ம் தேதி பதவியேற்பு!

தமிழகத்தின் புதிய ஆளுநராக அறிவிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோஹித், வரும் அக்டோபர் 6ம் தேதி காலை 9.30 மணிக்கு பதவியேற்கிறார். பன்வாரிலால் புரோஹித்துக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி  பதவிபிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

பன்வாரிலால்

தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யாவின் பதவிக்காலம் முடிந்த பின்னர்,  2016 செப்டம்பர் 2-ம் தேதி பொறுப்பு ஆளுநராக மகாராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவியேற்றார். அவர் பதவியேற்ற ஒருமாதத்திற்குள்ளாகவே அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, முழுநேர ஆளுநர் இல்லாமலேயே தமிழகம் இயங்கி வருகிறது. இந்நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித்தை நியமித்து உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து பன்வாரிலால் புரோஹித் அக்டோபர் 5ம் தேதி தமிழகம் வருகிறார். அக்டோபர் 6ம் தேதி தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவியேற்க உள்ளார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!