சென்னை திரும்பினார் வைகோ: அரசியல் கட்சித் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தார்

ஜெனீவாவில் உள்ள ஐ.நா சபை மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கை தமிழர்கள் பிரச்னை பற்றி பேச சென்றிருந்த ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ இன்று சென்னை திரும்பினார். 

Vaiko

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, 'இலங்கையில் தற்போது இருக்கும் நிலைமையை நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். அப்படி செய்வதன் மூலம் உண்மை தெரிய வரும் என்று ஐ.நா சபையில் பேசினேன். பொது வாக்கெடுப்பு நடத்துவதே அங்கிருக்கும் பிரச்னைக்கு தீர்வாக அமையும் என்றும் ஐ.நா-வில் எடுத்துரைத்தேன். மேலும் அவர்கள் இடத்தில் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்றும் இலங்கை பிரச்னைக்கு தனி ஈழம் மட்டுமே தீர்வாக அமையும் என்றும் விளக்கினேன். அங்கிருந்த போது என்னைத் தாக்க முயன்ற சிங்களர்களுக்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்த அரசியல் கட்சித் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்' என்று கூறினார். ஜெனீவாவில் வைகோ இருந்த போது சிங்களர்கள் அவரை சூழ்ந்துகொண்டு தாக்க முயன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!