Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டு இடங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டு இடங்களில் ஆா்.எஸ்.எஸ் அமைப்பின் ஊர்வலங்கள் நடைபெற்றது. கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட ஆர்.எஸ்.எஸ் பண்பு பயிற்சி முகாம் நாகர்கோவில் அருகே கீழக்காட்டு விளை ஞானமந்திர் வித்யாலயா பள்ளியில் நடந்து வருகிறது. குமரி மேற்கு மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி பண்பு முகாம் அண்டூரில் நடக்கிறது. அதன் நிறைவு நாள் நிகழ்ச்சி மற்றும் விஜயதசமி விழாவை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ்  ஊர்வலம் நடைபெற்றது. குமரி கிழக்கு மாவட்ட ஆர்.எஸ்.எஸ் சார்பில் நாகர்கோவில் என்.ஜி.ஓ காலனியில் இருந்து தொடங்கிய அணிவகுப்பு ஊர்வலம் பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரியில் நிறைவடைந்தது.


அதுபோல குமரி மேற்கு மாவட்ட ஆர்.எஸ்.எஸ் சார்பில்  தும்ப கோடு ஜங்ஷன் முதல் குலசேகரம் எஸ்.கே.பி.வி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வரை ஆர்.எஸ்.எஸ்  அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. அணிவகுப்பு முடிவில் ஆர்.எஸ்.எஸ்.முகாமில் பயிற்சி பெற்றவைகளை, அமைப்பினர் செய்து காட்டினார்கள். ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தினால் குமரி மாவட்டம் பதற்றமாக காணப்பட்டது. ஆர்.எஸ்.எஸ்.ஊர்வலம் நடந்த பகுதிகளில் அதிகளவு போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement