Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'இது போலவும் இதைவிடப்பெரியதும்...' - ட்விட்டரில் நெகிழ்ந்த கமல்ஹாசன்

சிவாஜி கணேசனின் 90-வது பிறந்தநாளையொட்டி சென்னை அடையாறு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அவரது மணிமண்டபத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். இவ்விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஷால், கார்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் அமைச்சர்கள், தமிழ் திரையுலகினரும் கலந்து கொண்டனர். இதையொட்டி கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

கமல்ஹாசன்

இந்த விழா குறித்து கமல்ஹாசன், 'செவாலியே சிவாஜி மணிமண்டப விழா இனிதே நடந்தேறியது. இது போலவும் இதைவிடப்பெரியதும் செய்வோம் எங்கள் அய்யாவிற்கு' என்று அவரது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 

முன்னர் அவர் மணிமண்டப திறப்பு விழாவில் பங்கேற்ற பேசியபோது, 'மாநில, தேசிய, ஆசிய எல்லைகள் கடந்த உலக நடிகர் சிவாஜி கணேசன். சினிமாவுக்கு நான் நடிக்க வரவில்லை என்றால், அவரின் ரசிகராக இருந்திருப்பேன். எனவே இந்த விழாவுக்கு எப்படியும் நான் வந்திருப்பேன். அரசும் குடியும் நன்றி சொல்லும் விழா இது. நம் வாழ்க்கையை மேம்படடுத்தியது அவரது நடிப்பு. எத்தனை அரசுகள் வந்தாலும் இந்த கலைஞனை மதித்தேயாக வேண்டாம். அவர்கள் மதித்தே ஆவார்கள். தமிழர்கள் எப்போதும் சிவாஜியை ஞாபகம் வைத்திருப்பார்கள். இன்று அவரது கோடான கோடி ரசிகனில் ஒருவனாகவே இங்கு வந்திருக்கிறேன். தன்னிலை மறந்து என்னிலை மறந்து கலை ரசிகனாக இங்கு வந்திருக்கிறேன்' என்று பேசினார். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement