மேட்டூர் அணைத் திறப்பு! : 16 லட்சம் ஏக்கர் விளைநிலங்களுக்குப் பாசன வசதி

மேட்டூர் அணையிலிருந்து சம்பா சாகுபடிக்காக நீர் திறக்கப்பட்டுள்ளது. தமிழக அமைச்சர்கள் தங்கமணி, அன்பழகன், கருப்பணன் உள்ளிட்டோர் மேட்டூர் அணையில் இருந்து நீரைத் திறந்து வைத்தனர். 

mettur dam
 

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 94.84 அடியாக உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து பாசனத்துக்காக நீர் திறந்துவிடும்படி விவசாயிகள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இன்று காலை 10 மணியளவில் நீர் திறக்கப்பட்டது. அணை திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கமணி, கே.பி.அன்பழகன், கருப்பணன், மாவட்ட ஆட்சியர் ரோகிணி ஆகியோர் கலந்துகொண்டனர்.  

mettur dam
 

மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால் சேலம், நாமக்கல் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற உள்ளன. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

mettur 
 

அணைத் திறப்புக்குப் பின்னர், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி ‘விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மேட்டூர் அணைத் திறக்கப்பட்டுள்ளது. காவிரி டெல்டா பாசன வசதிக்காக மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 2,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று மாலை வினாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்படும். விவசாயிகள் நீரை முறைவைத்துப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' என்று அறிவுறித்தியுள்ளார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!