எனது அணி எம்.எல்.ஏ-க்கள் மீதான தடையை முறியடிப்பேன்! - டி.டி.வி.தினகரன் உறுதி

18 எம்.எல்.ஏ-க்கள் மீதான தடையை நீதிமன்றத்தின் மூலம் முறியடித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வீட்டுக்கு அனுப்புவோம் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். 


தேசப்பிதா மகாத்மா காந்தியின் 149 வது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு நாடு முழுவதுமுள்ள அவரது சிலைக்குத் தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்திவருகின்றனர். சென்னை கிண்டியிலுள்ள காந்தியின் நினைவிடத்தில் டி.டி.வி.தினகரன் தனது ஆதரவாளர்களுடன் சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன்பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'எடப்பாடி பழனிசாமி அரசு காவல்துறையைக் கையில் வைத்திருப்பதால் எங்கள்மீது தொடர்ந்து வழக்குகள் பதிவுசெய்யப்படுகின்றன.

ஆளும் அரசுக்கு போதிய எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு இல்லாததால் ஆட்சிக் கவிழும் என்று மு.க.ஸ்டாலின் சொல்லியிருக்கலாம். சசிகலாவுக்கு 15 நாள்கள் பரோல் கேட்டுள்ளோம். அவர், கண்டிப்பாக பரோலில் வருவார். எனது அணியைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏ-க்கள் மீதான தடை என்பது இடைக்காலத் தடைதான். அதை நீதிமன்றத்தின் மூலம் முறியடித்து எடப்பாடி பழனிசாமியை வீட்டுக்கு அனுப்புவோம்' என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!