சிகிச்சையளிக்க மருந்துவமனைகள் மறுப்பு - கேரளத் தமிழர் கோவையில் அனுமதி!

கேரளத்தில் நடந்த விபத்தில் சிக்கிய முருகன் என்பவருக்கு சிகிச்சையளிக்க கொல்லம், திருவனந்தபுரத்தில் மருத்துவமனைகள் அலைக்கழித்தன. சிகிச்சையளிக்கப்படாமல் 7 மணி நேரம் ஆம்புலன்ஸிலேயே இருந்த முருகன் பரிதாபமாக இறந்துபோனார். இந்தச் சம்பவம் இரு மாநில மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. கேரள முதல்வர் பினராயி விஜயன்,மருத்துவமனைகளின் அலட்சியத்தால் இறந்துபோன முருகனின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அளித்தார். கேரள சட்டமன்றத்தில் இந்தச் சம்பவத்துக்காகப் பகிரங்க மன்னிப்பும் கோரினார். 

கேரளத் தமிழருக்கு சிகிச்சையளிக்க மறுப்பு

ஆனால், முருகன் இறந்த பின்னரும் கேரள மருத்துவமனைகளின் அலட்சியப்போக்கு மாறவில்லை. தற்போது, மற்றொரு தமிழருக்கும் கேரள மருத்துவமனைகள் சிகிச்சையளிக்க மறுத்ததைத் தொடர்ந்து , அவர் கோவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருச்சூரில் வசித்து வந்த ராஜேந்திரனுக்கும் மற்றொருவருக்குமிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், ராஜேந்திரனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில், உறவினர்கள் அவரை திருச்சூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவருக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்கள் மறுப்புத் தெரிவித்தனர்.

தொடர்ந்து, கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் அவரைக் கொண்டு சென்றனர். கோழிக்கோட்டிலும் ரஜேந்திரனுக்கு சிகிச்சையளிக்க மறுக்கப்பட்டது. இரு மருத்துவமனைகளில் சிகிச்சை கிடைக்காத நிலையில், ராஜேந்திரன் தற்போது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தமிழர்கள் என்பதால் அலட்சியப்படுத்துகிறார்களா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!