காந்தி ஜெயந்தி அன்று திறக்கப்படும் ஆளில்லா பெட்டிக்கடை! | Gandhi Jayanthi : Honest shop opened at Thanjavur

வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (02/10/2017)

கடைசி தொடர்பு:17:15 (02/10/2017)

காந்தி ஜெயந்தி அன்று திறக்கப்படும் ஆளில்லா பெட்டிக்கடை!

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் இன்று ஒரு நாள் மட்டும் இயங்கும் ஆளில்லா கடையை ஹானஸ்டி ஷாப் என்ற பெயரில் பாபநாசம் ரோட்டரி சங்கத்தை சேர்ந்தவர்கள் திறந்துள்ளனர்.

ஆள் இல்லா பெட்டி கடை
 

இதுகுறித்து ரோட்டரி சங்க நிர்வாகிகள் பேசுகையில், ‘நேர்மை மிகுந்த தேசமாக இந்தியாவை உருவாக்க கனவு கண்டார் மகாத்மா காந்தி. அவர் பிறந்த நாளான இன்று அவர் கண்ட கனவை நினைவாக்கும் விதமாக இந்த கடையைத் திறந்துள்ளோம். கடந்த 16 வருடமாக இதேபோல் இந்த ஹானஸ்டி ஷாப் கடையைத் திறந்து வருகிறோம். நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில்தான் இந்த கடை திறக்கப்பட்டுள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கி  மாலை 6 மணி வரை இந்த கடை இயங்கும். இதில் எழுது பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், பிஸ்கட், சாக்லெட் போன்ற தின்பண்டங்கள் என அனைத்தும் இருக்கும். அந்த பொருள்களில் விலையும் அச்சிடப்பட்டிருக்கும். பொது மக்கள் தங்களுக்குத் தேவையானப் பொருள்களைத் தாங்களாகவே எடுத்துக்கொண்டு அதற்கான விலையை அவர்களே கல்லாப்பெட்டியில் போட்டுவிட வேண்டும். பொது மக்கள் இதில் மிகவும் நேர்மையாக நடந்துக்கொள்கிறார்கள்’ என்றனர்.  
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க