கலெக்டர் நடத்திய கிராம சபைக் கூட்டம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம், திருவள்ளுரில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் லதா கலந்துகொண்டு பார்வையிட்டார்.

 இக்கூட்டத்தில் கிராம வளம் மற்றும் தூய்மைக்கான இருவார இயக்கத்தை அக்டோபர் 1 முதல் 15  வரை சிறப்பிக்கக் கொண்டாடுவது குறித்து விவாதித்தல், குடிநீர் சிக்கனமாகப் பயன்படுத்துதல், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம், அந்தியோதயா இயக்கம், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்ட பணிகள் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விவரங்கள் குறித்து விவாதித்தல், ஆண்டறிக்கை மற்றும் வரவு செலவு, சுகாதாரம் (திறந்தவெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சிகள்), மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டப் பணிகள் முன்னேற்றம், சமூக தணிக்கை, மகளிர் திட்டம் மற்றும் கழிப்பறைக் கட்டி பயன்படுத்தும் பயனாளிகளைப் பாராட்டுத் தெரிவித்தல், திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் குறித்து நடவடிக்கை மேற்கொள்ளுதல், தூய்மையே சேவை இயக்க உறுதிமொழி ஏற்றல் மற்றும் இதரப் பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ரங்கசாமி, உதவி இயக்குநர் (தணிக்கை) கருப்பசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் ரகுவீரகணபதி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) அழகியமீனாள், அரசு அலுவலர்கள் மற்றும் கிராமப் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.               

Do you like the story?

Please Appreciate the Author by clapping!