சிவகங்கையில் கதர் விற்பனையை தொடங்கி வைத்த ஆட்சியர்! | co-operate textile sales started by collector

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (02/10/2017)

கடைசி தொடர்பு:21:00 (02/10/2017)

சிவகங்கையில் கதர் விற்பனையை தொடங்கி வைத்த ஆட்சியர்!

அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாள் விழா மற்றும் கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்க விழா சிவகங்கை, காந்தி வீதியில் உள்ள கதர் அங்காடியில் நடைபெற்றது. 

கதர் சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்  பேசும்போது “  சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் கட்டுப்பாட்டின் கீழ் சிவகங்கை மற்றும் காரைக்குடி ஆகிய ஊர்களில் கதர் விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. கதர் விற்பனை நிலையங்களில் கதர் இரகங்கள், பாலியஸ்டர் இரகங்கள், கண்கவர் பட்டு சேலைகள், பெட்ஷீட்கள், மெத்தை, தலையணைகள், தலையணை உறைகள், மெத்தை விரிப்புகள் மற்றும் துண்டு ஆகியவைகள் தரமான முறையில் தயார் செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும், அரசு துறைகளில் பணிபுரியும் அலுவலக உதவியாளர்களுக்கு சீருடை வகைகளும், இவை தவிர அலுவலர்கள், அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்களுக்கு தவணைகளில் தங்களது மாத ஊதிய அளவிற்கு கதர் இரகங்கள் கடனாகப் பெற்றுக் கொள்ளவும் வசதி செய்யப்பட்டு உள்ளது. காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கதர் இரகங்களுக்கு 3 சதவீதம், பாலியஸ்டர் பட்டு இரகங்கள்  30 சதவீதம்  என சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

 பொதுமக்களும், வாடிக்கையாளர்களும், அலுவலக பெருமக்களும், பள்ளி ஆசிரியர்களும், ஊராட்சி மற்றும் நகராட்சி பணியாளர்களும் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அதிக அளவில் கதர் இரகங்கள் வாங்கி பயன்பெற இதன் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது. கதர் அங்காடிகள் அக்டோபர் 02.10.2017 தேதி முதல் 10.10.2017 வரை விடுமுறை நாட்களிலும் செயல்படும். பின்னர் வழக்கம் போல் வேலை நாட்களில் செயல்படும்.

சென்ற ஆண்டில் சிவகங்கை மாவட்டத்தில் ரூ.50 லட்சம் மதிப்பான கதர் துணிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டு இம்மாவட்டத்திற்கு ரூ.110 லட்சமாக கதர் விற்பனைக் குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இக்குறியீட்டினை எய்திட பொதுமக்களும், ஆசிரியர்களும், அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் கதர் பட்டு மற்றும் பாலியஸ்டர் இரகங்கள் வாங்கி பயன்பெறுவதுடன் கிராமப்புற நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பு வழங்க தங்கள் நல்ஆதரவினை வழங்க வேண்டும்” என மாவட்ட ஆட்சித் தலைவர் லதா, தெரிவித்துள்ளார்.

         

 

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க