தூய்மை இந்தியா பணியைத் தொடங்கிய இந்தோ-திபெத் படை!

தூய்மை சேவை திட்டத்தின் கீழ் தூய்மைப் பணியை இந்தோ- திபத் எல்லை பயிற்சி மையத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் அரசனூர் அருகே இலுப்பகுடியில் அமைந்துள்ள இந்தோ திபத் எல்லை பாதுகாப்புப் படை பயிற்சி மையம். இந்த மையத்தின் சார்பாகத் தூய்மை சேவை திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதில் சுமார் 1,000 பயிற்சிப் படை வீரா்கள் இதில் கலந்து கொண்டனர்.  திருமாஞ்சோலை பகுதியிலிருந்து இலுப்பக்குடி வரையிலான 5 கி.மீ. சுற்றளவில் சாலையின் ஓரம் தேங்கிக் கிடந்த குப்பைக் கூளங்கள், பிளாஸ்டிக் கழிவுகள், தேவையில்லாத புற்செடிகள் ஆகியவற்றை அகற்றித் தூய்மைப் பணியை அவர்கள் மேற்கொண்டனா்.

மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தை நிறைவேற்றும் விதமாக இன்று இந்நிகழ்ச்சியை இந்தோ திபத் எல்லைப் பாதுகாப்புப் படை பயிற்சி மையத்தின் துணைக் காவல்கண்காணிப்பாளர் (DIG) ஆஸ்டீன் ஈபன் தொடங்கி வைத்தார். இந்தப் பகுதி சாலைகளின் இருபுறமும் விவசாயங்கள் நிறைந்த பகுதியாகும். மழைபெய்து வரும் நேரம் என்பதால் கால்வாய்களில் நிறைந்திருந்த குப்பைகளை இப்படையினர் சுத்தம் செய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள், கடந்த மாதம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் வரக்கூடிய நீர்வரத்து கால்வாய்களைச் சுத்தம் செய்து கொடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!