Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாகன தணிக்கையில் ஒரே நாளில் 417 பேர்மீது வழக்குப்பதிவு!

அரியலூர் மாவட்டத்தில் அதிக அளவில் விபத்துகள் நடப்பதால் அதைக் குறைக்கும் விதமாக ஜெயங்கொண்டம் காவல் உட்கோட்ட எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் தற்போது வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்படுத்தி வருகின்றனர். 

அதிக வேகம், அதிக பாரம் ஏற்றுவது, போதையில் வானம் ஓட்டுவது, கார்களில் சீட் பெல்ட் அணியாமல் ஓட்டுவது, லோடு வாகனத்தில் ஆட்களை ஏற்றிச் சென்றது, லாரிகளில் அதிக உயரம் ஏற்றிச் சென்றது. லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியது, சீருடை அணியாமல் ஓட்டியது, ஹெல்மெட் அணியால் இருசக்கரவாகனம் ஓட்டியது, பைக்கில் மூன்றுபேர் சென்றது, இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியது உள்ளிட்ட பலவகையான சாலை விதிகளை மீறியவர்கள் என 417 பேர் மீது அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சாலைவிதிகளைமீறிய 417 பேர்மீது வழக்குகள் பதிவுசெய்து 51ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டிருக்கிறது. ஒரு பக்கம் காவல்துறையினர் நடத்தும் சோதனை மக்களுக்கானது என்றாலும் சில போலீஸார் பணத்துக்காக மக்களிடம் கட்டாய வசூல் செய்வது வேதனையளிக்கிறது என்கிறார்கள் பொதுமக்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement