டெல்லி விழாவில் தூய்மையான கோயில் விருதைப் பெற்ற மதுரை கலெக்டர்! | Madurai Collector awarded at Delhi

வெளியிடப்பட்ட நேரம்: 05:30 (03/10/2017)

கடைசி தொடர்பு:12:32 (03/10/2017)

டெல்லி விழாவில் தூய்மையான கோயில் விருதைப் பெற்ற மதுரை கலெக்டர்!

தமிழக மக்கள் மகிழ்ச்சியடையும் வகையில் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தேசிய அளவிலான சிறந்த தூய்மையான கோயில் என்ற  விருது பெற்றதாக நேற்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இதைக்கேட்டு மதுரை மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். இதை சாத்தியப்படுத்திய மதுரை கலெக்டர், மாநகராட்சி ஆணையர், கோயில் இணை ஆணையாளர் ஆகியோரை பாராட்டினார்கள். அது மட்டுமல்லாமல் மதுரை மாவட்டத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து செயலாற்றி வருகின்றனர் இருவரும். இந்த நேரத்தில் அதை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த தேசிய விருது அறிவிக்கப்பட்டது அங்கீகரிப்பது போலிருந்தது. 

டெல்லி விழா

இந்த நிலையில், இன்று டெல்லியில் நடந்த விழாவில் வழங்கப்பட்ட விருதை  மதுரை கலெக்டர் வீரராகவா ராவ், மதுரை மாநகராட்சியின் ஆணையர் அனீஷ்சேகர் ஆகியோருக்கு மாநில அரசு, குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.அலுவியா மற்றும் மாநில வீடமைப்பு மற்றும் நகராட்சி விவகார அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி ஆகியோர் வழங்கினார்கள். டெல்லி விஞ்ஞான் பவனில் நடந்த சிறப்பான விழாவில் கலந்துகொண்டோர் மதுரை கலெக்டரையும் கமிஷனரையும் வாழ்த்தினார்கள். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க