Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கார் மோதி 2 மாணவிகள் பலி: திருச்சி அருகே சோகம்

திருச்சி, சிறுகனூர் அருகே எம்.ஏ.எம் பொறியியல் கல்லூரி் விடுதியில் தங்கிப் படிக்கும் இருவர்  சாலையை கடக்க முயன்றபோது கார் மோதி பலியான சம்பவம் பெரும் பரப்பை உண்டாக்கியுள்ளது.
விபத்துக்குள்ளான கார்
 
திருச்சி, சிறுகனூர், எம்.ஏ.எம் கல்லூரியில் முதலாம் ஆண்டு பொறியியல் படிக்கும் அரியலூர் மாவட்டம், கீழப்பழூரைச் சேர்ந்த இலக்கியா மற்றும் திண்டுக்கல் மாவட்டம் மரியநாதபுரம் பகுதியைச் சேர்ந்த சென்சியாராணி ஆகிய இருவரும் விடுமுறைக்குச் சொந்த ஊருக்கு சென்றுவிட்டு முதல் நாள் இரவே கல்லூரி விடுதியில் தங்கி, காலையில் கல்லூரிக்குச் செல்ல வந்தனர். அப்போது இருவரும் விடுதிக்குச் செல்ல சாலையைக் கடக்க முயன்றபோது சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற கார் மோதியது. இந்த விபத்தில் 2 மாணவிகளும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து சிறுகனூர் போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக  திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவிகள் இருவர் மரணம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement