Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புதிய கேளிக்கை வரி முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மல்டிஃபிலக்ஸ்கள் ஸ்டிரைக்!

Chennai: 

தமிழக அரசின் இரட்டை வரிவிதிப்பு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் உள்ள மல்டிஃபிலக்ஸ் திரையரங்குகள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளன. 

தியேட்டர்

தமிழகத்தில் சினிமா டிக்கெட்டுகளுக்கு 28 சதவிகித ஜி.எஸ்.டி. வரியுடன் 30 சதவிகித கேளிக்கை வரியும் விதிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 27-ம் தேதி முதல் புதிய கேளிக்கை வரியில் திருத்தம் செய்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் திரைப்படங்களுக்கான புதிய உத்தரவுப்படி கேளிக்கை வரி 30 சதவிகிதத்தில் இருந்து 10 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. மற்ற மொழி புதிய திரைப்படங்களுக்கு 20 சதவிகிதம் கேளிக்கை வரி விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட தமிழ்ப்படங்களுக்கு 7 சதவிகிதமும் மற்ற மொழிப் படங்களுக்கு 14 சதவிகிதமும் கேளிக்கை வரி விதிக்கப்பட்டுள்ளது. அரசுத் தரப்பில் கேளிக்கை வரி குறைக்கப்பட்டு இருப்பினும் தற்போது போடப்பட்டிருக்கும் புதிய வரி விதிப்பால், தியேட்டர்களில் டிக்கெட் விலை ஏறக்கூடும் என்று கூறப்படுகிறது. 

இதுகுறித்து மல்டிஃபிலக்ஸ் திரையரங்குகள் வைத்திருப்போர்கள் தரப்பிலிருந்து, சில நாள்களுக்கு முன்னர் சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையின்படி, தியேட்டர்களில் விற்பனை செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு ஜி.எஸ்.டி வரிக்கு மேல் புதிய கேளிக்கை வரியும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த இரட்டை வரி முறை ஏற்கெனவே அதிக வரி முறை மற்றும் சினிமா திருட்டின் மூலம் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் சினிமா துறை மீது மேலும் பளுவாக இருக்கும். எனவே, இப்போது விதிக்கப்பட்டிருக்கும் வரி முறை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். புதிய கேளிக்கை வரி முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மாநகராட்சி எல்லைக்குள் இயங்கும் மல்டிபிலக்ஸ்கள் இன்றிலிருந்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement