Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காந்தி நினைவு மண்டபத்தில் விழுந்த அபூர்வ ஒளி!

மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட பின் அவரது அஸ்தியில் கொஞ்சம் கன்னியாகுமரி முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் கரைக்கப்பட்டது. அஸ்தியைக் கரைப்பதற்கு முன்பாக பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்ட இடத்தில்தான் தற்போது காந்தி நினைவு மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபம் 1956-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி திறக்கப்பட்டது. காந்தி இறக்கும்போது அவருக்கு வயது 79. எனவே, அந்த வயதைக் குறிப்பிடும் வகையில் காந்தி நினைவு மண்டபத்தில்  உள்ள மையக்கூண்டு 79 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி  சூரிய ஒளி அவரது அஸ்தி வைக்கப்படிருந்த இடத்தில் விழும்படி இந்த மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அதுதான் இந்த மண்டபத்தின் தனிச் சிறப்பும் கூட. தினமும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை சுற்றுலாப் பயணிகள் பார்வைக்காக காந்தி நினைவு மண்டபம் இலவசமாக திறந்திருக்கும். காந்தி பிறந்த நாளை முன்னிட்டு மதியம் 12  மணியளவில் காந்தியின் அஸ்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் அபூர்வ ஒளி விழுந்தது.

இதை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர். கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் சஜ்ஜன் சிங் சவான் காந்தி மண்டபத்தில் அஸ்தி வைக்கப்பட்ட இடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர் விடுமுறை காரணமாக காலை முதல் சுற்றுலாப் பயணிகள் காந்தி நினைவு மண்டபத்தை சுற்றி ரசித்துப் பார்த்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement