Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இனயம் துறைமுகத் திட்டத்துக்கு எதிர்ப்புத்  தெரிவித்து காந்தி படத்துக்கு மனு  கொடுத்த காங்கிரஸார்!

கன்னியாகுமரி மாவட்டம் இனயம் பகுதியில், ரூபாய் 28 ஆயிரத்து 500 கோடி மதிப்பில் வர்த்தகத் துறைமுகம் அமைய உள்ளதாகக் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு  அறிவிப்பு வெளியானது. இந்தத் திட்ட அறிவிப்பு வெளியானது முதல் அப்பகுதி மீனவர்கள்  மற்றும் அனைத்து தரப்பினர் சார்பில் எதிர்ப்பும், அதேவேளையில் ஆதரவும் உள்ளது. குறிப்பாக இந்த இனயம் துறைமுகத் திட்டத்தால்  மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயம்  உள்ளதால் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என மீனவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர். 

நேற்று, 'காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இனயம் துறைமுகப் பணிகளைக் கைவிட வேண்டும்' என்ற கோரிக்கையுடன், குமரி மாவட்ட மீனவரணியின்  சார்பில், காந்தி  உருவப்படத்துக்கு மனு  கொடுக்கும் போராட்டம்  நடந்தது. தேங்காய்பட்டணம் மீன்பிடித்  துறைமுகத்தில் நடந்த இந்தப் போராட்டத்துக்கு, காங்கிரஸ்  மீனவரணியின் மாவட்டத் தலைவர் அந்தோணி பிச்சை தலைமை வகித்தார். காங்கிரஸ் மாவட்டச்  செயலாளர்கள் ஜோர்தான், ஜார்ஜ் ராபின்சன் முன்னிலை வகித்தனர். ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ., போராட்டத்தைத் தொடங்கிவைத்தார். பிரின்ஸ் எம் எல்.ஏ., சிறப்புரையாற்றினார். 


     

அதைத் தொடர்ந்து, எம்.எல்.ஏ-க்கள் ராஜேஷ்குமார் மற்றும் பிரின்ஸ் ஆகியோர் செய்தியாளர்களிடம்  பேசும்போது, 'இனயத்தில் செயல் படுத்துவது வர்த்தகத் துறைமுகம் அல்ல. பன்னாட்டு  சரக்குப் பெட்டக மாற்று முனையம் என்ற  மக்களைப் பாதிக்கும் திட்டம்தான். இந்தத்  திட்டத்தால் மீனவர்கள்,  சிறுபான்மை  முஸ்லிம்கள், விவசாயிகளின் வாழ்வாதாரம் அதிகம் பாதிப்படையும். மக்கள்  இடம்  பெயரும்   நிலை ஏற்படும். இந்தப் பாதிப்புகுறித்து அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், பல்வேறு  கட்ட போராட்டங்களை நடத்தியும் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இந்தியாவுக்கு அகிம்சை வழியில் சுதந்திரம் வாங்கித்தந்த மகாத்மா காந்தியிடம் மனு கொடுத்தாலாவது அரசு கண்டுகொள்ளுமா என்ற  நோக்கத்தில்,  இந்த  மனு கொடுக்கும்  போராட்டம்  நடத்தியுள்ளோம். இன்னும் அரசு கண்டுகொள்ளவில்லை என்றால் குமரி மாவட்டம் ஸ்தம்பித்துப் போகுமளவில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். இதற்காக மக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்படும். இந்தத்  திட்டத்தை முழுமூச்சுடன் எதிர்ப்போம்' என்று அவர்கள் தெரிவித்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement