Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அனிதாவின் முகத்தை அணிந்தபடி காந்தி சிலைக்கு மாலை அணிவித்த மாணவர்கள்

அனிதாவின் முகத்தை அணிந்தபடி காந்தி சிலைக்கு திருச்சி மாணவர் அமைப்பினர் மாலை அணிவித்தனர்.

காந்தி பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் மாணவர்கள், பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஆனால் திருச்சியில், மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அனிதாவின் படத்தை முகத்தில் அணிந்தபடி மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்துசெய்யக் கோரியும், திருச்சி மத்திய தலைமைத் தபால் அலுவலகம் அருகே உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனர்.

காந்தி சிலைக்கு மாலை அணிவித்த மாணவர்கள்.

அப்போது மாணவர்கள், “அனிதாவுக்கு அனிதாவாய் அணி திரள்வோம்” என்றும், “மத்திய அரசே! நீட் தேர்வை ரத்துசெய்”, என்றும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். மேலும் மாணவர்கள், கோஷமிட்டபடி ஊர்வலமாகச் செல்ல முயன்றனர்.

இதைப் பார்த்து பதறிய அங்கிருந்த போலீஸார், கோஷங்கள் எழுப்பியபடி ஊர்வலமாகப் போகக்கூடாது என்று அவர்களைத் தடுத்தனர். இதனால் அங்குப் பதற்றம் ஏற்படும் சூழல் உருவானது. அதையடுத்து, மாணவர்கள் தங்கள் எதிர்ப்பை அமைதியாகக் காண்பிக்கவே வந்தோம் என்றபடி, அமைதியாக ஊர்வலம் சென்று, மத்தியப் பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு கலைந்துசென்றார்கள்.

அனிதா முகமூடி அணிந்தபடி காந்தி சிலைக்கு மாணவர்கள் மாலை அணிவித்தது அப்பகுதியில் பரபரப்பை உண்டாக்கியது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement