வெளியிடப்பட்ட நேரம்: 03:30 (03/10/2017)

கடைசி தொடர்பு:07:40 (03/10/2017)

சென்னையில் உள்ள தனியார் கிளப்பில் திடீர் ரெய்டு!

சென்னை, அண்ணாசாலையில் உள்ள சுகுணா விலாச சபா (SVS) கிளப்பில் போலீஸார் தீடீர் சோதனை நடத்தியதாகத் தகவல் வந்துள்ளது.

எஸ்.வி.எஸ் கிளப்

சுகுணா விலாச கிளப்பில், வெளிநாடு மற்றும் வெளிமாநில மதுபான பாட்டில்கள் ஏராளமாக பதுக்கிவைத்திருந்ததாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. இதையடுத்து, திருவல்லிக்கேணி உதவி ஆணையர் தலைமையில் நடந்த திடீர் சோதனையில், பல லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளதாகத் தெரிகிறது. தற்போது, தொடர்ந்து கிளப் முழுவது‌ம் சோதனை மேற்கொள்வதாகவும் கூறப்படுகிறது. 

எஸ்.வி.எஸ் கிளப்