Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்துக்கு எதிராக வழக்கு!

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக் கமிஷனை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் கே.என்.விஜயன் வழக்குத் தொடர்ந்துள்ளார். 


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிப்பதற்காக, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நியமனம்செய்தார். இந்நிலையில், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தது தொடர்பாக அமைச்சர்கள் மாற்றி மாற்றிப் பேசிவருகிறார்கள். இதையடுத்து, தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், சி.பி.ஐ விசாரணை கோரி வருகிறார்கள்.

இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை கமிஷனை ரத்துசெய்யக்கோரி, மூத்த வழக்கறிஞர் கே.என்.விஜயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், 'சட்ட விரோதமாக இந்த விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த விசாரணை ஆணையத்தை ரத்துசெய்ய வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement