புரோக்கர்கள் கன்ட்ரோலில் இ-சேவை மையம்! கொந்தளிப்பில் பொதுமக்கள்

கல்வி, அரசு நலத்திட்டங்கள், ஆதார், விவசாய  உதவிகளைப் பெறுவதற்கான சான்றிதழ்களை, வி.ஏ.ஓ-விடமிருந்து ஆர்.ஐ, தாசில்தார் என்று ஒவ்வோர் அலுவலகமாக அலைந்து வாங்குவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். இதில், கையூட்டுகள் கொடுத்தால்தான் சான்றிதழ்கள் கைக்கு வரும். இந்நிலையை மாற்ற, விண்ணப்பித்து ஓரிரு நாள்களில் சான்றிதழ்களைப் பெறுவதற்கு, தமிழகம் முழுவதும் இ-சேவை மையங்களைத் தமிழக அரசு தொடங்கியது. கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலக வளாகங்களில் பெரும்பாலான  இ-சேவை மையங்கள் அமைந்துள்ளன. 

மதுரை

ஆனால், 'இங்கும் மக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள்' என்று தொடர்ந்து புகார் வரத்தொடங்கியுள்ளன. மதுரை மாவட்டத்தில் பெரும்பாலான இ-சேவை மையங்கள், புரோக்கர்கள் கன்ட்ரோலில் இயங்குகிறது. வழக்கமாக, தாலுகா அலுவலகத்தில் செயல்படும் புரோக்கர்கள் அல்லது அங்கு பணி செய்பவர்கள், மக்களிடம் மனுக்களை வாங்கி இ-சேவை மையங்களில் கொடுத்து வருமானம் பார்க்கிறார்கள். இதற்கு, அந்த இ-சேவை மையத்தின் பணியாளரும் ஒத்துழைக்கிறார். பொதுமக்கள் நேரடியாக விண்ணப்பித்தால், சர்வர் ப்ராப்ளம், நெட் ப்ராப்ளம் என்று அலையவிட்டு, புரோக்கர்கள் மூலமும் அலையவைக்கிறார்கள். எந்த இ-சேவை மையத்திலும் எந்த தாலுகாவுக்கும் விண்ணப்பிக்கலாம் என்ற வசதி இருந்தும், குறிப்பிட்ட தாலுகாவுக்குதான் விண்ணப்பம் வாங்க வேண்டுமென்று நேர்மையாகச் செயல்படும் மையங்களை மிரட்டியும் வைத்திருக்கிறார்கள். இதற்கு, சில வி.ஏ.ஒ, ஆர்.ஐ-களும் உடந்தை என்று சொல்லப்படுகிறது. சமீபத்தில், மேலூரில் முறைகேடாக நடந்துகொண்ட ஒரு மையத்தின் மீது நடவடிக்கை எடுத்தார் கலெக்டர். அதேபோல மற்ற மையங்களிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் மக்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!