’அவர் அரசியலுக்கு வந்தால் நல்லது செய்வார்!’ - லதா ரஜினிகாந்த்

’ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் நல்லது செய்வார்’ என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் லதா ரஜினிகாந்த்.  

latha rajini

சென்னையில் ஸ்ரீதயா அறக்கட்டளை நிகழ்ச்சியில் பேசிய லதா ரஜினிகாந்த், ‘ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து விரைவில் அறிவிப்பார். ரஜினி அரசியலுக்கு வந்தால் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம். அவர் அரசியலுக்கு வந்தால் நல்லது நடக்கும். அவர் அரசியலுக்கு வருவது எப்போது என்பது அவருக்குதான் தெரியும். நல்லது செய்வதற்கான 100 திட்டங்கள் ரஜினியின் மனதில் இருக்கும்’ என்று பேசியுள்ளார். சில நாள்களுக்கு முன்னர் ரஜினி புதிய கட்சித் தொடங்க உள்ளதாக வதந்தி பரவியது. இணையத்தில் விவாதப் பொருளாக மாறியது. தற்போது லதா ரஜினிகாந்த் பேசியுள்ளது மீண்டும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இன்னும் சில நாள்களுக்கு இணையத்தில் ’ரஜினிகாந்த் அரசியல்’தான் ஹாட்டாபிக்!
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!