சாமியார் ராம் ரஹீமின் வளர்ப்பு மகள் பஞ்சாப்பில் கைது!

பாலியல் வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மித் ராம் ரஹீம் சிங்கின் வளர்ப்பு மகளை போலீஸார் பஞ்சாப் மாநிலத்தில் கைதுசெய்துள்ளனர்.

ஹனிபிரீத்

சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஹனிபிரீத் இன்சான் என்பவரை ராம் ரஹீம் சிங் வளர்ப்பு மகளாகத் தத்தெடுத்து இருந்தார். இவர்தான் ஆசிரம நிர்வாகத்தைக் கவனித்து வந்துள்ளார். ராம் ரஹீம் சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஹரியானாவில் கலவரத்தைத் தூண்டியதாக ஹனிபிரீத்தைப் போலீஸார் தேடிவந்தனர். கடந்த ஒருமாதமாக தலைமறைவாக இருந்த அவரை ஜிராக்பூர் - பாட்டியாலா நெடுஞ்சாலையில் கைதுசெய்ததாக பஞ்ச்குலா போலீஸார் தெரிவித்தனர். 

பிரியங்கா தனேஜா என்பதே ஹனிபிரீத்தின் இயற்பெயராகும். தொலைக்காட்சி சேனல்களுக்குப் பேட்டியளித்த சற்றுநேரத்தில் அவரைக் காவல்துறையினர் கைதுசெய்தனர். தான் தலைமறைவாக இருக்கவில்லை என்றும், ராம் ரஹீமுடன் பாலியல் உறவு வைத்திருக்கவில்லை என்றும் ஹனிபிரீத் குறிப்பிட்டுள்ளார். ராம் ரஹீமுக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டபோது, நீதிமன்றத்துக்கு வெளியே ஆதரவாளர்களுடன் சேர்ந்து வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாக ஹனிபிரீத்துக்கு எதிராகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஹரியானா, பஞ்சாப் உள்பட நான்கு மாநிலங்களில் கடந்த மாதம் நிகழ்ந்த வன்முறையில் 38 பேர் உயிரிழந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!