நீட் தேர்வு போராட்டத்துக்கு தேசதுரோக வழக்கா...? பழ.நெடுமாறன் கண்டனம்

நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள்மீது தேசத் துரோக வழக்குப் பதிவது கண்டனத்துக்குரியது எனத் தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் கருத்துத் தெரிவித்துள்ளார். 

 

தஞ்சை முள்ளி வாய்க்கால் முற்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’கல்லூரியில் படிக்கும் எஸ்.சி, எஸ்.டி. பழங்குடியினர் மக்களுக்கும், மாணவர்களுக்கும் முன்பு வழங்கிய உதவித்தொகையை மீண்டும் அப்படியே வழங்க வேண்டும். அப்போதுதான் எஸ்.டி., எஸ்.டி. மாணவர்களுக்கும் தரமான கல்வி போய்ச்சேரும்.
நவோதயா பள்ளிகள் தமிழகத்துக்குத் தேவைற்றது. ஆனால், அதைத்தான் தமிழகத்தில் மத்திய அரசு திணிக்க நினைக்கிறது. இது, இந்தியைத் திணிப்பதற்கான செயலே தவிர மாணவர்களின் முன்னேற்றத்துக்கான நோக்கமாக இருக்காது.

நீட் தேர்வு தொடர்ந்தால் தமிழகம் மேலும் பல மாணவ, மாணவிகள் உயிரை இழக்க நேரிடும். நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்மீது தேசத் துரோக வழக்கு தொடர்வது கண்டனத்துக்குரியது. தமிழகத்தில் கிராமம்தோறும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதலாக மருத்துவர்களை நியமித்திருந்தால் நாளுக்கு நாள் டெங்குவால் ஏற்படும் இறப்புகள் நிகழ்ந்திருக்காது. ஆனால், டெங்கு நோயால் உயிர்கள் பழியாகவில்லை என்று சொல்கிறது தமிழக அரசு’ என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!