Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

ராணுவ அஞ்சலி

புனேயில், வாகன விபத்தில் பலியான தூத்துக்குடி மாவட்டம், மேலப்பூவாணி கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரரின் உடல் இன்று அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டி அருகிலுள்ள மேலப்பூவாணி கிராமத்தைச் சேர்ந்தவர் சிங்கராஜ். இவர் புனேயில் 11-வது பட்டாலியன் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றிவந்தார். இவர், கடந்த  இரண்டு நாள்களுக்கு முன்பு, இரவு 11 மணிக்கு ராணுவ வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது, எதிர்பாராதவிதமாக கீழே விழுந்ததில், வாகனத்தின் பின் சக்கரம் உடல் மீது ஏறி பரிதாபமாக உயிரிழந்தார்.

சிங்கராஜ்ராணுவ வீரர் சிங்கராஜின் உடல், மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு மும்பையிலிருந்து விமானம்மூலம் திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு நேற்று நள்ளிரவு கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து ராணுவ வாகனத்தில் இன்று காலை அவரது சொந்த ஊரான மேலப்பூவாணி கிராமத்திலுள்ள அவரது வீட்டில் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இன்று காலை, அவரது உடலுக்கு ராணுவ அதிகாரிகள் மற்றும் அரசு சார்பில் ஸ்ரீவைகுண்டம் வட்டாச்சியர் தாமஸ்பயஸ் அருள் ஆகியோர் அஞ்சலிசெலுத்தினர். அதன்பின், அவரது உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம்செய்யப்பட்டது.

விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் சிங்கராஜ், தனக்கு தொழில்நுட்பப் பிரிவில் பதவி உயர்வு கிடைத்ததாகக் கூறி 45 நாள்கள் தன் குடும்பத்தினருடன் விடுமுறையில் இருந்துவிட்டு, கடந்த மாதம்தான் மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில், திடீரென விபத்தில் உயிரிழந்த சம்பவம், கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சிங்கராஜுக்கு ரேகா என்ற மனைவியும், 4 வயதில் ஆஷிஷ்ராஜ் என்ற மகனும், 2 வயதில் ரோஸ்லின் மேரி என்ற மகளும் உள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement