Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் அரிட்டாபட்டி மலை

அரிட்டாபட்டி

மதுரை மேலூரை அடுத்த அரிட்டாபட்டி கிராமம், கோடையிலும் சோலை காணும் பசுமையான கிராமம். இந்தக் கிராமம், மேலூரில் ஒரு குட்டி சுற்றுலாத்தலம் போல விளங்குகிறது . இங்கு வாழும் மக்களும் இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்ந்துவருகின்றனர் . ஏழு மலைகளைக்கொண்ட இந்தக் கிராமத்தில், அரிய வகை ரேப்ட்டார்ஸ் என்று சொல்லக்கூடிய லகார் ஃபால்கன், சகீன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பறவைகள் வசித்துவருகின்றன.

சில அரியவகைப் பறவைகள், அரிட்டாபட்டி மலையில் கூடு கட்டி வாழ்ந்துவருகின்றன. மேலும், இங்கு குடைவரைக் கோயில்கள், வட்டெழுத்துகள் பொறிக்கப்பட்ட இடங்கள், புராதானப் பாடல்களில் இடம் பெற்ற குளங்களும் உள்ளன. இந்நிலையில், இந்த இயற்கை அதிசயங்கள் மற்றும் பறவைகளைக் காண பல்வேறு இடங்களில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவர்களும் சமூக ஆர்வலர்களும் வந்துசெல்கின்றனர்.

 

அரிட்டாபட்டி

தற்போது, தொடர்ச்சியாக விடப்பட்ட அரசு விடுமுறையை நல்ல விதமாகப் பயன்படுத்த கராத்தே மற்றும் யோகா பயிற்சிபெறும் மாணவர்கள் இங்குள்ள பறவைகளைக் கண்டு ரசித்தனர். மேலும், மலை அடிவாரத்தில் உள்ள ஊற்றுகளை ரசித்துவிட்டு அதன் அருகில் தங்கள் பயிற்சிகளை இனிமையாக மேற்கொண்டனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement