Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குழந்தைகளுக்குத் தவறான மருந்தைக் கொடுத்த அரசு மருத்துவமனை!

Tiruppur: 

குழந்தைகளுக்குத் தவறான மருந்தைக் கொடுத்த அரசு மருத்துவமனை செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் புகார் அளித்திருக்கின்றனர்.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டத்தில் அமைந்துள்ள நெய்க்காரன்பாளையம் கிராமத்தில் குடும்பத்துடன் வசித்துவருகிறார் சரவணன் என்ற கூலித் தொழிலாளி. இவருக்கு, சாதனா என்கிற 6 வயது மகளும், சித்தார்த் என்கிற 2 வயது மகனும் இருக்கின்றனர். கடந்த சில நாள்களுக்கு முன்னர், அந்தக் குழந்தைகள் இருவரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, காங்கேயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு, குழந்தைகளை மருத்துவர் பரிசோதித்த பிறகு, காய்ச்சல் குணமடைவதற்கான மருந்துகள், அங்கு பணியில் இருந்த செவிலியர்கள்மூலம் குழந்தைகளின் பெற்றோரிடம் தரப்பட்டிருக்கிறது. பின்னர், குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துச்சென்ற பெற்றோர், மருத்துவமனையில் தரப்பட்ட மருந்துகளை குழந்தைகளுக்கு வழங்கியிருக்கிறார்கள்.

இந்நிலையில், அந்த மருந்தைக் குடித்த சிறுமி சாதனா மற்றும் அவரது தம்பி சித்தார்த் ஆகியோருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டிருக்கிறது. பின்னர் விசாரித்ததில், சளி மருந்தை வழங்காமல் தோல்நோய்க்குத் தரப்படும் மருந்தை மாற்றி வழங்கியதுதான் குழந்தைகளின் இத்தகைய நிலைக்கு காரணம் என்பது பெற்றோருக்குத் தெரிய வந்திருக்கிறது. பின்னர் குழந்தைகள் இருவரையும் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளித்த பின்னரே உடல்நிலை தேறியிருக்கிறார்கள்.

இந்நிலையில், குழந்தைகளுக்கு தவறான மருந்தைக் கொடுத்து, உயிர்மேல் அக்கறையற்று செயல்பட்ட செவிலியர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பெற்றோர் இருவரும் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement