Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் லாபம் பெறும் கன்னியாகுமரி ஆவின்!

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆவின் நிறுவனம் பால்வளத் துறையின் கீழ் செயல்பட்டுவருகிறது. ஆனால், பெரும்பாலான மாவட்டங்களில் நஷ்டத்திலும், குறைந்த லாபத்திலும்தான் இந்நிறுவனம் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் லாபத்தை குமரி மாவட்ட ஆவின் நிறுவனம் பெறுகிறது என குமரி மாவட்ட பால்வள பெருந்தலைவர் அசோகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரிடம் பேசும்போது, ''ஆவின், அரசு சார்பு கூட்டுறவு நிறுவனமாகச் செயல்பட்டுவருகிறது. ஆவினின் நோக்கம் லாபம் இல்லை. மக்களுக்கு தரமான பால் மற்றும் பால் சார்ந்த பொருள்களைக் கொடுக்க வேண்டும் என்பதுதான். அதுபோல, ஆவின் பால் கலப்படம் இல்லாமல் தற்போது விற்பனை செய்யப்படுகிறது. குமரி ஆவினில் பால் மற்றும் பால் சார்ந்த பொருள்களான நெய், மோர், பால்கோவா, சுவையூட்டிய பால் மற்றும் பாதாம் பவுடர், ஐஸ்கிரீம்  உள்ளிட்ட பல பொருள்கள் எப்போதும் தட்டுப்பாடின்றி  கிடைக்கின்றன. ஆவின் பொருள்களை விளம்பரம் இல்லாமலே மக்கள் வாங்குகின்றனர். குமரி மாவட்டத்தில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 7 பாலகங்கள் இருந்தன. அது இப்போது 20 பாலகங்களாகியுள்ளன.

தற்போது, நாள் ஒன்றுக்கு 16,500 லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. பால்கோவா, சுமார் 100 கிலோ வரை ஒருநாளைக்கு விற்கிறது. பாதாம் பவுடர்  தமிழகம் முழுவதும் 200 கிராம் ஜார், குமரி ஆவினில் இருந்துதான் அனுப்பப்படுகிறது. ஆவினுக்கு பால் வரத்தை அதிகரிக்க,  விவசாயிகளுக்கு வங்கிகளில் லோன் வாங்கிக் கொடுத்து, மாடுகளை வாங்கச்சொல்லி ஊக்குவிக்கிறோம். அதன்மூலம் பால் கொள்முதல் அதிகரித்துள்ளது. கால்நடைத் தீவனத்துக்கு 4 ரூபாய் மானியம் அவர்களுக்குக் கிடைக்கிறது. பால் கொள்முதல் செய்து வந்ததும் தரக் கட்டுப்பாட்டு அதிகாரிமூலம் பரிசோதனை செய்த பின்தான் பெற்றுக்கொள்வோம். பாலில் தண்ணீர் கலப்படம் செய்திருந்தால், உடனே பாலை திருப்பி அனுப்பிவிடுவோம். தனியார் பால்கள் பல வந்தாலும் குமரி மாவட்டத்தில் ஆவின் பால்தான் அதிகம் விற்பனையாகிறது. குளிரூட்டப்பட்ட நான்கு பாலகங்கள், புதிதாக குமரி மாவட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது பள்ளி, கல்லூரிகளில் ஆவின் பாலகங்களைத் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம். சுமார் 30 பாலகங்கள் விரைவில் திறக்கும் முயற்சியும் நடக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு,  சுமார் 30 லட்சம் ரூபாய் லாபத்தில் இயங்கிக்கொண்டிருந்த குமரி ஆவின், தற்போது ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் லாபம் பெறுகிறது. இந்த ஆண்டு இறுதியில், சுமார் 5 கோடி ரூபாய் லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்'' என்று அவர் தெரிவித்தார்.

குமரி ஆவினின் லாபக் கணக்கை மற்ற மாவட்ட ஆவினுக்கு கொஞ்சம் சொல்லிக்கொடுங்க பாஸ்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close