வெளியிடப்பட்ட நேரம்: 08:20 (04/10/2017)

கடைசி தொடர்பு:08:46 (04/10/2017)

தி.மு.க முதன்மைச் செயலாளர் துரைமுருகன் அப்போலோவில் அனுமதி

தி.மு.க முதன்மைச் செயலாளர் துரைமுருகன், இன்று காலை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துரைமுருகன்

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், தி.மு.க முதன்மைச் செயலாளருமான துரைமுருகன், இன்று காலை சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நிலை காரணமாக சமீப காலமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் இருந்தார் துரைமுருகன். கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து கட்சிப் பணிகளை ஆற்றிவந்தார்.

இந்நிலையில், சளித்தொல்லையின் காரணமாக சென்னை அப்போலோவின் இன்று காலை சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். திடீரென ஏற்பட்ட சளித்தொந்தரவுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், சிகிச்சை முடிந்த பின்னர் துரைமுருகன் வீடு திரும்பி, தொடர்ந்து கட்சிப் பணிகளில் ஈடுபடுவார் எனக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.