தா.பாண்டியனை 'தாமஸ்' பாண்டியன் என தமிழிசை விமர்சனம்!

ந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தா. பாண்டியனை, ’தாமஸ் பாண்டியன்’ என பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

தா. பாண்டியனுக்கு தமிழிசை கண்டனம்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா போலவே  பூஜைகளில் நம்பிக்கையுடையவர். மயிலாடுதுறையில் நடந்த மகாபுஷ்பகரம் விழாவில் எடப்பாடி பழனிசாமி தன் அமைச்சரவை சகாக்களுடன் புனிதநீராடினார். அதைத்தொடர்ந்து, திருப்பதி கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவர் தா. பாண்டியன், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோயில் குளங்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்வதை விமர்சித்திருந்தார். இதைக் கண்டித்து, பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்துள்ள ட்விட், சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. 

தமிழிசை தன் ட்விட்டில்,'' தமிழக முதல்வர் திருப்பதி கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்ததை கேலி பேசும் தா. பாண்டியன் என்ற தாமஸ் பண்டியனைக் கண்டிக்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். தமிழிசை சௌந்தரராஜன், தா. பாண்டியனைப்  பல முறை விமர்சித்திருந்தாலும் இவ்வாறு குறிப்பிட்டதில்லை. தாமஸ் பாண்டியன் என்று அவர் குறிப்பிட்டது உள்நோக்கம்கொண்டது என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!