வெளியிடப்பட்ட நேரம்: 10:10 (04/10/2017)

கடைசி தொடர்பு:11:22 (04/10/2017)

ஜெ, மரணம்குறித்துப் பேசத் தடையில்லை: உயர் நீதிமன்றம்!

'மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம்குறித்து அமைச்சர்கள் பேசுவதற்கு எவ்விதத் தடையும் விதிக்க முடியாது' என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றம்

அ.தி.மு.க பிரமுகரான குடவாசல் முருகானந்தம் என்பவர், ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க விசாரணைக் கமிஷன் அமைத்த பின்னர், அமைச்சர்கள் அவரது மரணம்குறித்துப் பேசுவது விசாரணைக்குத் தடையாக அமையும் என்பதால், அதற்குத் தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதுதொடர்பான வழக்கு, சமீபத்தில் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது, விசாரணைக் கமிஷன் தலைவர் ஆறுமுகசாமி நியமனம் தொடர்பான அரசாணை நீதிபதிகள் முன் சமர்ப்பிக்கப்பட்டது. அப்போது, ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைச்சர்கள் பேசுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது. ஆனால், ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைச்சர்கள் பேசுவது என்பது முற்றிலும் அமைச்சர்களின் தனிப்பட்ட பேச்சுரிமை ஆகும். இதற்குத் தடை விதிக்க இயலாது எனக் கூறிய நீதிபதிகள், வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட்டனர்.