Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’அந்த நோட்டீஸில் தேசத்துரோக வழக்குப் போடுமளவுக்கு ஒன்றுமில்லை!’ - கலகலத்த தினகரன்

சசிகலாவின் கணவர் நடராசனுக்கு, சிறுநீரகம் மற்றும் கல்லீரல் அறுவை சிகிச்சை நல்ல முறையில் நடைபெற்றுள்ளதாக டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை அடையாறில் செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன், ‘'எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செல்லாது என்றே தீர்ப்பு வரும் என்று நம்புகிறேன் . சசிகலா விரைவில் பரோல் கிடைக்கப்பெற்று வெளியில் வருவார்’' என்றார். 

தினகரன்
 

கடந்த மாதம் பெரியார், அண்ணா பிறந்த நாளையொட்டி சேலம் மாவட்ட தினகரன் அணி சார்பில் துண்டுப் பிரசுரம் ஒன்று அச்சடித்து விநியோகிக்கப்பட்டது. அதில், நீட்டுக்கு எதிரான வாசகங்களும் நீட்டை அமல்படுத்திய மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு எதிரான வாசகங்களும் இடம்பெற்றிருந்தன. மேலும், சசிகலா மற்றும் தினகரனை வாழ்த்தி, வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. ’கட்சியில் களையெடுப்பு தொடரும்’ என்றும் அந்த துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதுதொடர்பாக, நேற்று முன்தினம் முதலமைச்சர் மற்றும் பிரதமர் ஆகியோரை அவமதிக்கும் வகையில், சேலத்தில் நோட்டீஸ் விநியோகித்ததாக தினகரனால் நியமிக்கப்பட்ட சேலம் மாவட்டச் செயலாளர் எஸ்.இ.வெங்கடாசலம் உள்ளிட்ட 6 பேர் கைதுசெய்யப்பட்டனர். இது தொடர்பாக, டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட 14 பேர் மீது சேலம் போலீஸார் தேசத் துரோக வழக்குப் பதிவு செய்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்கள் தினகரனிடம் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த தினகரன், ‘என்மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. அந்த சர்ச்சைக்குரிய நோட்டீஸை தயார் செய்தது யார் என்றே தெரியவில்லை. மேலும் அந்த நோட்டீஸில் தேசத் துரோக வழக்கு போடும் அளவுக்கு எந்தத் தவறான கருத்தும் அச்சிடப்படவில்லை. சட்ட வல்லுநர்களும் இதைத்தான் சொல்கின்றனர். அந்த நோட்டீஸில் பொதுச் செயலாளரான சசிகலாவின் படமும் துணைப் பொதுச்செயலாளரான என் புகைப்படமும் உள்ளன.  என்மீது வழக்குத் தொடர்ந்தவர்கள் மீது சட்டப்படி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வேன்’ என்றார்.  


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement