உலக சுகாதார அமைப்பின் உயர் பதவியில் இந்தியப் பெண் மருத்துவர் நியமனம்! 

செளமியா சுவாமிநாதன்

உலக சுகாதார அமைப்பின்  துணை இயக்குநர் அதிகாரியாக, இந்தியாவைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் செளமியா சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவைச் சேர்ந்த ஒருவர், இந்த அமைப்பின் மிக உயரிய பதவியில் நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. 

இவர், தற்போது  இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை இயக்குநராக  இருக்கிறார். இந்தியாவில் பசுமைப்புரட்சியை அறிமுகப்படுத்திய  எம்.எஸ்.சுவாமிநாதனின் மகளான இவர், காச நோய் குறித்த ஆய்விலும், விழிப்பு உணர்வு ஏற்படுத்தியதிலும் முக்கியப் பங்காற்றியிருக்கிறார். கடந்த 30 ஆண்டுகளாக, மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டுவரும்  டாக்டர் செளமியா சுவாமிநாதன், சென்னையிலுள்ள 'நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஃபார் ரிசர்ச் இன் ட்யூபர்குலோசிஸ்’ என்ற அமைப்பின்  இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார். 

தற்போது, இவருக்கு  வழங்கப்பட்டிருக்கும்  பதவி, உலக சுகாதார அமைப்பின் இரண்டாவது உயர் பதவியாகும். அந்த அமைப்பின் தலைமை இயக்குநராக டாக்டர்  டிட்ரோஸ் அதனோம் கிப்ரியேசுஸ்  (Dr Tedros Adhanom Ghebreyesus) இந்த ஆண்டு ஜூலை மாதம் நியமிக்கப்பட்டார். அதற்கடுத்த பதவியில், டாக்டர் செளமியா சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!