Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதல்வர் - துணை முதல்வர் மீது தினகரன் புகார்!

’முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் தங்களது பதவியை தவறாகப் பயன்படுத்தினார்கள்’ என டி.டி.வி. தினகரன் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.

தினகரன்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்னர், அ.தி.மு.க பல்வேறு அணிகளாகப் பிரிந்தது. இதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியுடன் பன்னீர்செல்வம் அணியினர் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக அவ்வப்போது பேசப்பட்டுவந்தது. தினகரன் அணி என்று தனி அணி உருவாகத் தொடங்கியவுடன் பன்னீர் செல்வம், எடப்பாடி அணியுடன் இணைந்தார். துணை முதல்வர் ஆனார். இந்நிலையில், தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்த படலமும் அரங்கேறியது. இதுதொடர்பான வழக்கு, தற்போது உயர் நீதிமன்ற விசாரணையில் உள்ளது.

அணியினர், ஒருவர் மாறி ஒருவர் வழக்குகளும் புகார்களும் தொடுத்துவந்த நிலையில், இன்று பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி மீது, டி.டி.வி. தினகரன் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார். அதில், ’ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் ஆகிய இருவரும் தங்கள் பதவிகளைப் பயன்படுத்தி என்மீது புதிய குற்றச்சாட்டுகளைப் பதிவுசெய்துவருகின்றனர். கட்சி மற்றும் சின்னம்குறித்த வழக்கில் எங்களை கலந்துகொள்ளவிடாமல் இருப்பதற்காகவே, புகார்களும் வழக்குகளும் பதியப்பட்டுவருகின்றன’ என தினகரன் கூறியுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement