Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விளக்கக் கூட்டங்கள் நடத்த ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு முடிவு!

போராட்டக் காலத்தில் நடந்த நிகழ்வுகளை ஆய்வு செய்யவும், நீதிமன்றத்தில் நடந்த வாத பிரதி வாதங்களை ஊழியர்கள் மத்தியில் விளக்கவும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்கும் விளக்க கூட்டங்களை நடத்த மாநில ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது.

அதன் அடிப்படையில் வருகிற ஞாயிற்றுக்கிழமை சிவகங்கையில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நீதிமன்ற நிகழ்வுகள் குறித்த விளக்கக் கூட்டம் நடைபெற உள்ளது.

இது குறித்து சிவகங்கை மாவட்ட ஜாக்டோ - ஜியோ தொடர்பாளர் தமிழரசன், இளங்கோ, முத்துப்பாண்டியன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, `கடந்த மாதம் 7-ம் தேதி முதல் 9 நாள்கள் பல்வேறு போராட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இறுதியாக நீதிமன்றத் தடையையும் மீறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கைகளைத் தமிழக அரசு நிறைவேற்றக்கோரி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டோம். இதில் மாநிலம் முழுவதும் சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள் கலந்துகொண்டனர்.  கூட்டமைப்பின் தீவிரமான போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில்  நீதிமன்றம் தலையிட்டுத் தலைமைச் செயலாளரை நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராகச் செய்து சில உறுதி மொழிகளைப் பெற்றுத்தந்தது. அதனடிப்படையில் சில நடவடிக்கைகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் தமிழக முதல்வரிடம் வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசும் இடைக்கால நிவாரணம் வழங்குவது குறித்து பரிசீலித்து வருகிறது. நீதிமன்ற உத்தரவின்படி வருகிற அக்.13-ல் ஊதியக்குழு அமல்படுத்துவது குறித்து நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும்.

இந்நிலையில் ஜாக்டோ - ஜியோ வேலை நிறுத்தமும் நீதிமன்ற நடவடிக்கைகளும் என்ற தலைப்பில் மாவட்டந்தோறும் விளக்கக்கூட்டம் நடத்த மாநில உயர்மட்டக்குழு முடிவாற்றியுள்ளது. இதனடிப்படையில் சிவகங்கை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட அலுவலகத்தில் வருகிற அக். 8-ம் தேதி மாவட்ட விளக்கக்கூட்டம் நடைபெற உள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement