Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தினகரன் தொடர்ந்த வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு !

இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக தங்கள் தரப்பில் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய போதுமான கால அவகாசம் வழங்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி டி.டி.வி தினகரன் தாக்கல் செய்திருந்த மனு நீதிபதிகள் வேணுகோபால், அப்துல் குத்தூஸ் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தினகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'நவம்பர் 18ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் இதுவரை, அதற்கான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. அது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆகவே தற்போது இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக அவசரமாக முடிவெடுக்க வேண்டிய தேவையில்லை. மேலும், தேர்தல் ஆணையம் தற்போதைய பொதுக்குழு, தீர்மானங்கள் குறித்து விசாரணை செய்யும் வகையில் விசாரணை எல்லையை விரிவுபடுத்தியுள்ளது. ஆகவே லட்சக்கணக்கான பக்கங்களைக் கொண்ட ஆவணங்களைத் தாக்கல் செய்ய கூடுதலாக அக்டோபர் 31 முதல் பிப்ரவரி 28ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்க வேண்டு மெனக் கோரினார்'.

அதற்கு மதுசூதனன் மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், தேர்தல் ஆணையம் ஏற்கெனவே ஆவணங்களைத் தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கியது. ஜூன் 16ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டுமென அறிவுறுத்திய நிலையில், அதன் பின்னரும் உரிய முடிவெடுக்காத காரணத்தினாலேயே நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தேர்தல் ஆணையம் முன்பாகவும் மனுதாரர் இதே கோரிக்கையை முன்வைத்த போது, தேர்தல் ஆணையம் அக்டோபர் 4வரை கால அவகாசம் வழங்கியது. மேலும் செப்டம்பர் 15ல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், இவ்வளவு தாமதமாக வழக்கு தொடர்வது ஏற்கத்தக்கதல்ல. இரட்டை இலைச் சின்னம் தொடர்பான விசாரணையைத் தாமதப்படுத்தும் நோக்கிலேயே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது, இந்த வழக்கு விசராணைக்கு உகந்ததே அல்ல எனத் தெரிவித்தனர்.  இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement