Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டாக்டர் கிருஷ்ணசாமிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நெல்லையைச் சேர்ந்த மள்ளர் பாரத அமைப்பின் செயலாளர் சிவ ஜெயப்பிரகாஷ் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், "புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தேவேந்திரகுலத்தான் என்று போலி சாதிச் சான்றிதழ் பெற்றுள்ளார். எனவே, இவர் போலியாகப் பெற்றுள்ள சாதிச் சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். 

இந்த மனு நீதிபதிகள் அமர்வு முன் விசாராணைக்கு வந்தது. இதுபோன்ற வழக்கு ஏற்கெனவே பல ஆண்டுகளுக்கு முன் வந்தபோது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் தற்போது மீண்டும் இதுபோன்ற மனு அளிக்கப்பட்டுள்ளது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே, இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என அரசுதரப்பு வழக்கறிஞர் கூறினார். அதைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி கிருஷ்ணசாமி போலி சாதிச் சான்றிதழ் பெற்று உள்ளார். ஆகவே, நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாதத்தை முன் வைத்தார் .

அதைத் தொடர்ந்து நீதிபதிகள் இந்த மனுவின் மீதான நீதிமன்ற தெளிவுக்காக தமிழக வருவாய்த்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை செயலர்கள் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு மனு மீதான விசாரணையை அக்டோபர் 23-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement