’மதுரையில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை அனுமதிக்கக் கூடாது’ - காவல் ஆணையரிடம் மனு

மதுரையில் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு நடத்த உள்ள ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று திராவிடர் விடுதலைக் கழகத்தினர்  மாநகரக் காவல் ஆணையரிடம் மனு அளித்தனர். 

ஆர்.எஸ்.எஸ்.ஊர்வலம்


இதுகுறித்து பேசிய திராவிடர் விடுதலைக் கழக மாவட்டச் செயலாளர் மணிஅமுதன்,'மதுரையில் ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் வரும் 8-ம் தேதி  ஊர்வலம் நடத்தவுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. ஆர்.எஸ்.எஸ். காந்தியடிகளைச் சுட்டுக் கொன்ற இயக்கம். அந்தக் காரணத்தினால், ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் ஊர்வலத்துக்கும், நிகழ்ச்சிகளுக்கும் தடை விதித்திருந்தார்.

தமிழகத்தில் எந்தவொரு மதக் கலவரமும் வந்து விடக் கூடாது என்பதற்காகவும், மதுரைப் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதியும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்குத் தடை விதிக்க வேண்டுமென்று கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளோம்' என்றார்.  இந்த ஊர்வலத்தை அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைக்க இருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது. தி.வி.க.வின்  கோரிக்கைக்குத் தமிழ்ப் புலிகள், ஆதித்தமிழர் பேரவை, ஆதித்தமிழர் கட்சி, புரட்சிகர இளைஞர் கழகம், தந்தை பெரியார் திராவிடக் கழகம், இளந்தமிழகம், சி.பி.எம்.எல், வனவேங்கைகள் பேரவை, தந்தை பெரியார் பாசறை ஆகிய அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!