’நூறு வருடங்களுக்கு முன் காணாமல் போன தேவஸ்தானத்தைக் கண்டுபிடியுங்கள்’ - மதுரையில் ஆட்சியரிடம் மனு

நூறு வருடங்களுக்குமுன் காணாமல்போன தேவஸ்தானத்தையும், பெருமாள் கோயில்களையும், சொத்துகளையும் கண்டுபிடித்து தரும்படி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தங்கராஜ் என்பவர், கழுத்தில் கோரிக்கை அட்டையை மாட்டிக்கொண்டு புகார் தெரிவிக்க வந்தார். 

திருமோகூர்

புகாரை பிரசுரமாக அனைவருக்கும் வழங்கிக்கொண்டிருந்தவரிடம் பேசினோம், '' என்னுடைய தாத்தா பெருமாளின் தகப்பனார் பெரியகருப்பன் என்பவர் மதுரை திருமோகூர் தேவஸ்தானத்தில் கோயில் மேனேஜராகப் பணியாற்றியுள்ளார். 1915 -ல் அவர் மரணம் அடைந்தபின், ஏகப்பட்ட சொத்துகள் வைத்திருந்த அவர் மனைவி ராக்கம்மாளும், அவர் மகனும் எனது தாத்தாவுமான பெருமாள் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டு அவர்களுடைய சொத்துகளை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்துள்ளனர். இதைப்பற்றி பழைய ஆதாரங்களைத் தேடியபோது, திருமோகூர் தேவாஸ்தானத்துக்குப் பாத்தியப்பட்ட 55 கிராமங்கள் இப்போது இல்லை.

ஒவ்வொரு கிராமத்திலும் பெருமாள் கோயில்கள் இருந்திருக்கின்றன. கோயில் நிலங்களை அபகரிக்க பெருமாள் கோயில்கள் பிள்ளையார் கோயிலாகவும், அம்மன் கோயிலாகவும் மாற்றியுள்ளனர். வெளியூர்க்காரர்கள்பேரில் கோயில் நிலத்தை பட்டா போட்டுள்ளார்கள். பல கண்மாய்கள் மறைக்கப்பட்டுள்ளன. பெருமாள் கோயிலிலிருந்த ஐம்பொன் சிலைகளைக் காணவில்லை, விஜயநகரத்து மன்னர்களால் தேவஸ்தானத்துக்குத் தானமாக வழங்கப்பட்ட நிலங்களை ஆக்கிரமிப்பு செய்திருப்பவர்களிடமிருந்து மீட்க வேண்டும். 1915 ல் உள்ள அ.பதிவேட்டின் அடிப்படையில் இந்த மோசடியை விசாரிக்க வேண்டும் '' என்றார். இது சம்பந்தமாக அனைத்து அதிகாரிகளுக்கும் புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றார். நூறுவருடங்களுக்கு முன் நடந்த நிலமோசடியை விசாரிக்கச் சொல்லும் அவரின் கோரிக்கை நிறைவேறுவதும், முடங்குவதும் அதிகாரிகளின் கைகளில்தான் உள்ளது’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!