பிரபல ரவுடி ஶ்ரீதர் கம்போடியாவில் தற்கொலை!

கொலை, ஆள்கடத்தல் என பல்வேறு வழக்குகளில் காவல்துறையால் தேடப்பட்டு வந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ஸ்ரீதர் கம்போடியா நாட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

 

ஶ்ரீதர்

காஞ்சிபுரத்தை அடுத்த திருப்பருத்திக்குன்றத்தைச் சேர்ந்தவர் ஶ்ரீதர் தனபால். இவர் மீது கொலை, ஆள் கடத்தல், நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

பல முறை காவல்துறையால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார். அதையடுத்து, வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று தலைமறைவாக இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், அவர் குடும்பத்தில் மனைவி குமாரியை கடந்த வருடமும் அவரது சகோதர் செந்திலை கடந்த ஜனவரி மாதமும் அமலாக்கத்துறையினர் கைதுசெய்து விசாரித்தனர்.  மகன் சந்தோஷ்குமார் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களிடமும் தொடர்ச்சியாக விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, ஶ்ரீதர் துபாயில் தலைமறைவாக இருப்பாதாகவும் அவரைக் கைதுசெய்ய அமலாக்கத்துறை இண்டர்போல் போலீஸாரின் உதவியை நாட உள்ளதாகவும் கூறப்பட்டது.  

இந்நிலையில் ரவுடி ஶ்ரீதர் கம்போடியாவில்  விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டதாக காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹிதிமானி தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!