திருச்செந்தூர் கோயிலின் செப்டம்பர் மாத உண்டியல் வசூல் ரூ.1.68 கோடி

tiruchendur kovil temple

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், கடந்த செப்டம்பர் மாத உண்டியல் வசூல் ரூ.1.68 கோடியைத் தாண்டியது.

இதுகுறித்து திருக்கோயிலின் இணை ஆணையர் பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஒவ்வொரு மாதமும் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, கடந்த செப்டம்பர் மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி திருக்கோயில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனார் திருமண மண்டபத்தில், திருக்கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது. கொடிமரம், கோயில் வளாகம், உள் பிரகாரம், மகாமண்டபம் ஆகிய இடங்களிலுள்ள உண்டியல்களில்  சேர்ந்த காணிக்கைகளைத் திருக்கோயில் ஊழியர்கள், ஐயப்ப சேவா சங்கத்தினர் ஆகியோர் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

இதில், மொத்தம் 1 கோடியே 68 லட்சத்து 82 ஆயிரத்து 526 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனர். மேலும், 1 கிலோ 530 கிராம் தங்கம், 21 கிலோ 750 கிராம் வெள்ளிப் பொருள்களையும் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனர். அதோடு, 277 வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளை வெளிநாட்டுப் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனர்’’ எனத் தெரிவித்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!