நெல்லையில் கைதிகள் இருவர் தப்பி ஓட்டம்!

நெல்லையில், போலீஸ் பிடியிலிருந்து இரு கைதிகள் தப்பி ஓடிய சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமறைவான கைதிகளைப் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.கைதி

கைதிகள்நெல்லை மாவட்டம், கூடங்குளத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். 23 வயது நிரம்பிய இவர்மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. திருட்டு தொடர்பாக இவர் போலீஸாரிடம் அடிக்கடி மாட்டி சிறைக்குச் சென்றுள்ளார். கடந்த முறை திருட்டு வழக்கு ஒன்றில் இவர் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்  படுத்தப்பட்டு சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, போலீஸாரின் பிடியிலிருந்து தப்பினார். 

அவரைக் கைதுசெய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்துவந்த நிலையில், யாருக்கும் தெரியாமல் மும்பைக்குத் தப்பிச்சென்றுவிட்டார். ஆனால், தனக்குப் பழக்கப்பட்ட திருட்டுத் தொழிலை மட்டும் மணிகண்டனால் விடமுடியவில்லை. அதனால், மும்பையிலும் திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு, மும்பை போலீஸாரிடம் மாட்டிக்கொண்டார். அங்கு கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

அப்போது, அதே மும்பைச் சிறையில் பல்வேறு வழக்குகள் தொடர்பாக அடைக்கப்பட்டிருந்த சேலத்தைச் சேர்ந்த டேவிட் என்ற தேவேந்திரனுடன் மணிகண்டனுக்குப் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மும்பைச் சிறையிலிருந்து தப்பி, தமிழகம் வந்தனர். பின்னர், இருவரும் சேர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில், நாகர்கோவிலில் ஒரு கார் திருட்டு வழக்கில் இருவரும் கைதாகினர். 

ஆனால், இருவரும் போலீஸ் பிடியிலிருந்து இப்போது தப்பிவிட்டனர். இருவரையும் பிடிக்க போலீஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், இருவரும் போலீஸாரிடம் மாட்டிக்கொண்டனர். அவர்களை நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வந்த போலீஸார், நாகர்கோவில் சிறைக்கு அழைத்துச்சென்றபோது, கைவிலங்குடன் இருவரும் தப்பிவிட்டனர். அவர்களை போலீஸார் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!