Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விடைபெற்றார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்!

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், இன்றுடன் விடைபெற்றார். 

ஆளுநர் வித்யாசாகர் ராவை வழியனுப்பும் விழா, சென்னை விமான நிலையத்தில் நடைபெற்றது. அதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யா ஓய்வுக்குப் பின்னர் காலியாக இருந்த அந்தப் பதவிக்கு, கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மகாராஷ்டிரா ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ், தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார். 

இவரது பதவிக் காலமான கடந்த ஓராண்டில், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து அவரது மரணம், ஜல்லிக்கட்டுப் போராட்டம் என தமிழகத்தில் பல்வேறு முக்கியப் பிரச்னைகள் நடந்தன. மேலும், கடந்த ஓராண்டில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி என இரு முதலமைச்சர்களுக்கு அவர் பதவிப்பிரமாணம் செய்துவைத்திருக்கிறார். அதேபோல, ஆளுநர் மாளிகையை மக்கள் பார்வைக்குத் திறந்துவைத்தது, ஆளுநர் மாளிகையில் ஔவையார் மற்றும் திருவள்ளுவர் சிலைகளைத் திறந்தது போன்றவை இவரது பணிக்காலத்தின்போது நடந்தவை.

தமிழகத்தின் புதிய ஆளுநாராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோஹித், இன்று மாலை சென்னை வர இருக்கிறார். தமிழகத்தின் ஆளுநராக அவர் நாளை பதவியேற்றுக்கொள்கிறார். அவருக்கு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார்.   

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement