Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மழையால் வீட்டின் சுவர் இடிந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு!

கிருஷ்ணகிரியில் பெய்த கனமழையால் வீடு இடிந்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த சில நாள்களாக மழை பெய்துவருகிறது. இதில், நேற்றிரவு முதல் மிதமான மழை தொடர்ந்து பெய்து வந்தது. கிருஷ்ணகிரி அருகே உள்ள தண்டேகுப்பத்தில், நேற்றிரவு கனமழை பெய்தது. அந்தப் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ராதா (65), இவரது மகள் புஷ்பா (35), பேரன்கள் வசந்த குமார் (15), பகவதி (13), பேத்தி முல்லை (8) ஆகியோர் குடிசையில் தூங்கிக்கொண்டிருந்தனர்.

அப்போது, குடிசை வீட்டின் அருகில் இருந்த ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து, குடிசைவீட்டின் மீது விழுந்தது. இதில், குடிசைவீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ராதா, இவரது மகள் புஷ்பா மற்றும் பேரன்கள் வசந்தகுமார், பகவதி, முல்லை ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதமாக இறந்தனர்.
 

சம்பவம்குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர், பொக்லைன் இயந்திரம்மூலம் இடிபாடுகளை அகற்றி, உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும், சம்பவ இடத்துக்கு நேரில் சென்ற வருவாய் கோட்டாட்சியர் அருண், வட்டாட்சியர் கண்ணியப்பன் ஆகியோர், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். 

salem

இதுப்பற்றி கிருஷ்ணகிரியில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காளியப்பன், ''எங்க அம்மா பேரு ராதா. அவர்களுக்கு அக்காள் ஜெயந்தி, தங்கை புஷ்பா, நான் என மூன்று பிள்ளைகள். அக்காள் ஜெயந்திக்கு திருமணம் ஆகி விட்டது. எனக்கும், என் தங்கை புஷ்பாவிற்கு திருமணம் ஆகவில்லை. அதனால் அம்மா, தங்கை, நான் மூன்று பேரும் ஒன்றாக வாழ்ந்து வந்தோம்.

எங்க அக்கா ஜெயந்தியின் கணவர் வெங்கடேஷ்  இறந்து விட்டதால் அக்காவின் மகன்கள் வசந்தகுமார், பகவதி மற்றும் மகள் முல்லை ஆகியோர் எங்கள் வீட்டில் தங்கி படித்து வந்தார்கள்.  நாங்கள் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள். குடிசை வீட்டில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். நேற்று இரவு வழக்கம் போல எல்லோரும் சாப்பிட்டு விட்டு வீட்டுக்குள் தூங்கத் தொடங்கினோம். லேசான மழை தூறல் இருந்ததால் நான் வீட்டுக்குள் படுத்திருந்தேன்.

வீட்டில் படுத்து தூங்குவதற்கு இடம் பற்றாக்குறையாக இருந்ததால் மழைத் தூறல் நின்றதும் வீட்டின் வெளியே வந்து படுத்து தூங்கி விட்டேன். இரவு சுமார் 3 1/2 மணி இருக்கும் திடீரென எங்க பக்கத்து ஓட்டு வீடு எங்க குடிசை மீது விழுந்ததில் குடிசை தரைமட்டமானது. வீட்டுக்குள் படுத்து தூங்கிக் கொண்டிருந்த எங்க அம்மா, தங்கை, எங்க அக்காவின் குழந்தைகள்  மீது சுவர் விழுந்து அழுத்திக் கொண்டது. நான் பதறி கத்தி கதறினேன். யாரையும் காப்பாற்ற முடியவில்லை'' என்று தலையில் அடித்துக் கொண்டு கதறி அழுதாறு மயங்கி விழுந்தார்.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement