'தூய்மை' விருதுபெற்ற இரண்டு நாள்களில் மீனாட்சியம்மன் கோயிலுக்குள் புகுந்த மழை வெள்ளம்! | Lack of basic facilities in Meenatchi Amman temple

வெளியிடப்பட்ட நேரம்: 10:52 (05/10/2017)

கடைசி தொடர்பு:11:34 (05/10/2017)

'தூய்மை' விருதுபெற்ற இரண்டு நாள்களில் மீனாட்சியம்மன் கோயிலுக்குள் புகுந்த மழை வெள்ளம்!

நேற்று பெய்த மழையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் மழைநீர் புகுந்ததன்மூலம் கோயில் நிலைமை எப்படியுள்ளது என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது. சமீபத்தில், தேசிய அளவில் 'தூய்மை' விருது பெற்றதற்காக மதுரை மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இப்போதோ, வேதனைப்படுத்தியுள்ளது இந்தச் சம்பவம்.

மீனாட்சியம்மன்

இதுபற்றி இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் சோலைக்கண்ணன், " 'தூய்மை' பாரத இயக்க திட்டத்தின் கீழ், மதுரை மாநகராட்சியுடன் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனும் இணைந்து, மீனாட்சி அம்மன் கோயிலுக்கு 11 கோடி செலவில் தூய்மை மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டதில், மத்திய அரசால் மீனாட்சி அம்மன் கோயிலுக்குத் தூய்மை விருது வழங்கப்பட்டு சில நாள்கள்கூட ஆகவில்லை. அதற்குள் நேற்று பெய்த மழையில் கோயிலுக்குள் மழைநீர் புகுந்துவிட்டது. மழைநீர் வெளியே செல்ல வழியில்லாமல்  கோயிலுக்குள் சூழ்ந்ததால், பக்தர்கள் அவதிக்குள்ளானார்கள். இதற்காகவா 11 கோடி ரூபாய் செலவுசெய்தார்கள். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தங்கும் வசதி, உணவு உண்ண வசதி, கழிப்பறை வசதி, குளியலறை வசதி, உடை மாற்ற வசதி, மொட்டை போட வசதி, பார்க்கிங் வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, மருத்துவ வசதி போன்ற எந்த வசதியும் இல்லை. சித்திரை வீதிகளில் நாய்கள் தொல்லை. கோயில் பணியாளர்கள் கோயிலுக்குள்ளேயே அசுத்தம் செய்கின்றனர்.

பக்தர்களுக்கு எந்த ஒரு வசதியும் செய்துகொடுக்காத கோயில் நிர்வாகத்துக்கு, எதன் அடிப்படையில் மத்திய அரசு விருது வழங்கியது? ஒரு மழைக்கே மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் மழைநீர் புகுந்துவிட்டது. இதற்காகவா 11 கோடி ரூபாய் செலவுசெய்தார்கள். இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க