Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’கெயில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்’ - தமிழக அரசுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

'தமிழகத்தின் கெயில் திட்டத்தை நிறைவேற்ற எதிர்ப்புத் தெரிவிக்கும் விவசாயிகளுக்கு, திட்டம்குறித்த விழிப்புஉணர்வை ஏற்படுத்த வேண்டும்' என்று தமிழக அரசை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். 

கேரள மாநிலம் கொச்சியிலிருந்து கூட்டநாடு, மங்களூரு வழியாக பெங்களூருக்கு எரிவாயு கொண்டுசெல்லும் திட்டத்தை, இந்திய எரிவாயு ஆணையம் (கெயில்) செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்காக, தமிழகத்தில் சேலம், கோவை, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர் ஆகிய 7 மாவட்டங்கள் வழியாக 925 கி.மீ தூரத்துக்கு எரிவாயுக் குழாய்கள் பதிக்கும் திட்டத்தை கெயில் நிறுவனம் செயல்படுத்திவருகிறது. இந்தத் திட்டத்துக்காக விவசாய நிலங்கள் வழியாகக் குழாய்கள் பதிக்க விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். விவசாயிகளுக்கு ஆதரவாக, அந்தத் திட்டத்துக்கு தமிழக அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து, கெயில் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசின் உத்தரவுக்கு தடை அளிக்கப்பட்டது. இருப்பினும், விவசாயிகளின் தொடர் எதிர்ப்பால் திட்டம் சரிவர செயல்படுத்தப்படாத நிலையில் இருக்கிறது.   

இந்த நிலையில், கெயில் திட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, 'திட்டம் செயல்படுத்தப்படும் இடத்துக்கு விவசாயிகளை நேரில் அழைத்துச் சென்று விளக்க வேண்டும்' என்று தமிழக அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார். கெயில் திட்டத்துக்காகப் பதிக்கப்படும் குழாய்களால் விவசாயம் பாதிக்கப்படாது என்பதை களத்துக்கே சென்று விவசாயிகளுக்கு எடுத்துக் கூறுமாறும்  பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement